சர்ச்சைக்குரிய மருந்துகள் இன்னமும் மருத்துவமனைகளில்: கெஹலிய ரம்புக்வெல்ல
அண்மையில் பேராதனை போதனா மருத்துவமனையில் இளம் பெண்ணொருவரின் மரணத்திற்கு காரணமானதாக கூறப்படும் மருந்து இன்னமும் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும், நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் குறித்த மருந்தில் 66,000 க்கும் மேற்பட்ட குப்பிகள் கையிருப்பில் இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று(18.07.2023) கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
கையிருப்பில் உள்ள மருந்துகள்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“குறிப்பிட்ட மருந்தின் 145,930 குப்பிகள் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கையிருப்பில் உள்ள 79,260 குப்பிகள் இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது.
மொத்தம் 19,200 மருந்து குப்பிகள் மட்டக்களப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 16,800 ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளன.
பேராதனை போதனா மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட 24,000 குப்பிகளில் 12,800 குப்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவிசாவளை மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட 2,400 குப்பிகளில் 1,800 குப்பிகளும் மொரட்டுவை மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட 50 குப்பிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.” என தெரிவித்துள்ளார்.
சஜித் எழுப்பிய கேள்வி
நிலையியற் கட்டளை 27-2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்த மருந்து 2013 ஆம் ஆண்டு இலங்கையில் பதிவு செய்யப்பட்டு 20 வருடங்களாக பாவனையில் உள்ளதாகவும், உலகப் புகழ்பெற்ற நிறுவனமொன்று இதனை இறக்குமதி செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
எனவே தரம் குறைந்த மருந்துகளே மரணத்திற்குக் காரணம் என்ற குற்றச்சாட்டுகளை தாம் மறுப்பதாக தெரிவித்த அவர், இலவச சுகாதாரத் துறையை நாசப்படுத்துவதற்காக இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri
