தேசிய மாவீரர்களின் தியாகங்களுக்கு புறம்பாக செயற்படுகின்ற எவரோடும் இணையப் போவதில்லை: க.சுகாஸ்
தமிழ் மக்கள் தேசிய மாவீரர்களின் தியாகங்களுக்கு புறம்பாக செயற்படுகின்ற எவரோடும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பேச்சு நடாத்தவோ அல்லது இணைந்து செயற்படவோ போவதில்லை என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை காலமும் திரை மறைவில் பதவிகளுக்கு போட்டி போடுவதை ஏற்கனவே நாம் மக்களுக்குத் தெளிவுபடுத்தியிருந்தோம்.
தற்சமயம் இடம்பெறும் போட்டிகள், கட்சித்தாவல்கள் போன்றவற்றை மக்கள் தற்போது அறியும் போது இதுவரை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கூறி வந்த செய்தி உண்மையாக்கப்பட்டுள்ளது.
அதிகாரப் போட்டி
அந்த அதிகாரப் போட்டியில் தற்போது தமிழ்த் தேசியமக்கள் முன்னணியையும் இழுக்கப் பார்க்கிறார்கள்.
ஒரு புறத்தில் ரெலோவுடன் பேச்சுவார்த்தை ஈடுபடப் போவதாகவும் இன்னொரு பக்கத்திலே தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக போலித் தகவல்கள் பரப்பப்படுகின்றன.
நாம் ஒரு விடயத்தில் உறுதியாக உள்ளோம். கூட்டணி என்ற கதைக்கே இடம் கிடைக்காது கூட்டணி ஆகட்டும் தமிழரசு ஆகட்டும் ஒற்றையாட்சிக்கு ஆதரவளித்த கட்சிகள்.
இணைந்து செயற்பட போவதில்லை
மாறாக மாவீரர்களின் தியாகத்திற்கு புறம்பாக செயற்படும் எவரோடும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பேச்சு நடத்தவோ இணைந்து செயற்படவோ போவதில்லை.
தமது போலி முகத்திரை கிழிக்கப்பட்டதும் அதற்குப் பரிகாரம் தேடும் வகையில் தமிழ்த் தேசிய முன்ணனியையும் இணைக்கப் பார்க்கின்றார்கள்.
ஆயுதப் போராட்டத்தின் பின் இக் கட்சிகள் ஒற்றையாட்சிக்கு ஆதரவளித்ததால் தான்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை
உருவாக்கினோம் எனத் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
