நாட்டைச் சூறையாடியவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற நாடு : சஜித் பிரேமதாச (video)
இலஞ்சம், ஊழல், களவு, கொள்ளையிட்டு நாட்டைச் சூறையாடியவர்களுக்கு, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற நாடுதான் இந்த நாடு என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரத்தம் சுத்திகரிக்கும் இயந்திரத்தினை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்ததாவது,
”இலஞ்சம், ஊழல், களவு, கொள்ளையிட்டு நாட்டைச் சூறையாடியவர்களுக்கு, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற நாடுதான் இந்த நாடு. மாலை மரியாதை செய்து அவர்களை சிம்மாசனத்தில் அமர்தியததான் இந்த நாடு. அவ்வாறானவர்களுக்கு மக்களின் பசி, கண்ணீர் புரிவதில்லை. அவர்களுக்கு இலஞ்சம், ஊழல், களவு, கொள்ளை இதனைத்தவிர வேறு எதுவும் அவர்களுக்குத் தெரியாது.
39 லட்சம் ரூபாய் பெறுமதியான இரத்தம் சுத்திகரிக்கும் இயந்திரத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வழங்கி இப்பிரதேசத்தில் வாழக்கின்ற மக்களின் இன்னல்களின் ஒருபகுதியை நிவர்த்தி செய்வதற்கு எனக்கு கடவுள் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்.
சுவாசம் எனும் எமது திட்டத்தினூடாக வழங்கப்படும் எமது இச்செயற்றிட்டத்தின் 55 வது வைத்தியசாலையாகும், இதுவரையில் நாம் 1680 லட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளோம்.
இதனை ஒரு சாதாரண வேலைத்திட்டமாக கருதமுடியாது. இது உயிர்காக்கும் வேலைத்திட்டமாகும். அதுபோல் இதுவரையில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு, 2292 லட்சம் ரூபா பெறுமதியான 48 பாடசாலைகளுக்கு தலா ஒவ்வொரு பேருந்துகளை வழங்கியுள்ளோம்.
பிரபஞ்சம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் 178 லட்சம் ரூபா பெறுமதியான கணிணிகளையும் பாசாலைகளுக்கு வழங்கியுள்ளோம். இவ்வாறு வேறுபட்ட சிந்தனையில் நாம் வேலைசெய்து கொண்டிருக்கின்றோம்.
74 வருட அரசியல் வரலாற்றில் எந்த எதிர்க்கட்சியும் இவ்வாறு இந்நாட்டில் வேலை செய்திருக்கவில்லை. மட்டக்களப்பில் 3 தேர்தல் தொகுதிகள், 616 வாக்குச்சாவடிக்கள், 14 பிரதேச செயலாளர் பிரிவுகள், 345 கிராம சேவை உத்தியோகஸ்த்தர் பிரிவுகள், 1240 குக்கிராமங்கள், லட்சக்கணக்கான மக்கள், இம்மாவட்டத்தில் வாழ்கின்றார்கள்.
இச்சந்தர்ப்பத்தில் நான் உறுத்தியெடுத்துக் கொள்கின்றேன். இம் மாவட்டத்தில் வாழ்கின்ற அனைத்து மக்களின் பிரச்சினைகளையும், தீர்த்து வைப்பதற்கு எதிர்காலத்தில் பொறுப்பெடுப்போம் என்று. இவ் வைத்தியசாலைக்கு மெத்தைகளை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை ஒன்றை என்னிடம் முன்வைத்திருந்தார்.
அதனை அக்காலத்தில் எம்மால் வழங்க முடியாமல் போய்விட்டது. எதிர்காலத்தில் அதனையும், வைத்தியசாலைக்குத் தேவையான ஏனைய மருத்துவ இயந்திரங்களையும் நாம் வழங்குவோம். கடந்த காலத்திலிருந்து வந்த அரசாங்கங்களும், எதிர்க்கட்சியினரும், மாறி மாறி கேம் ஆடிக்கொண்டிருப்பார்கள் மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு மக்களுக்கு மானியம் வழங்குவதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றுவார்கள், மாறாக எவ்வாறாயினும் ஆட்சியைக் கைப்பற்றிவிடுவோம் என்ற எண்ணத்துடன் எதிர்க்கட்சியினர் அரசை விமர்சித்துக் கொண்டே இருப்பார்கள்.
“அவனுகளும் ஒன்றுதான் இவனுகளும் ஒன்றுதான்” என மக்கள் கூறுவார்கள். கடந்த சுனாமிக்குப் பினனர் கோடிக்கணக்கான பணம் இலங்கைக்கு வந்திருந்தது. அதன் பின்னர் வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்டு ஜனாதிபதியாக்கியவர்கள்தான் “அவனுகளும் ஒன்றுதான் இவனுகளும் ஒன்றுதான்” எனக் கூறுபவர்கள். இவர்கள் மத்தியிலே நாங்கள் வித்தியாசமானவர்கள்.
நாட்டின் தலையெழுத்தை மாற்றும் நோக்குடன் எதிர் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு மிகவும திறம்பட மக்களுக்குச் சேவை செய்து கொண்டிருக்கின்றோம். அதனை மக்கள் உணர்ந்துள்ளார்கள். நாம் இவ்வாறு அபிவிருத்திகளைச் செய்யும்போது சிலர் சிரித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதுதான் இந்நாட்டின் இன்றய நிலைமை.
எனவே கல்வியிலும், சுகாதாரத்திலும் வீழ்ந்துகிடக்கின்ற நாட்டைக் கட்டியயெழுப்ப வேண்டும். வெளிநாடுகளுக்கு நிகரான ஒரு டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மாணவர்கள் முன்னேற வேண்டும். இதனை சிலர் ஏழனம் செய்கின்றார்கள். அதற்காக நாம் கவலைப்படப் போவதில்லை.
இலஞ்சம், ஊழல், களவு, கொள்ளையிட்டு நாட்டைச் சூறையாடியவர்களுக்கு, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற நாடுதான் இந்த நாடு. மாலை மரியாதை செய்து அவர்களை சிம்மாசனத்தில் அமர்தியததான் இந்த நாடு. அவ்வாறானவர்களுக்கு மக்களின் பசி, கண்ணீர் புரிவதில்லை.
அவர்களுக்கு இலஞ்சம், ஊழல், களவு, கொள்ளை இதனைத்தவிர வேறு எதுவும் அவர்களுக்குத் தெரியாது. எனவே நாம் கல்வியிலும், சுகாதாரத்திலும் புரட்சியை ஏற்படுத்துவோம். மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்களின் அனைத்து விடையங்களையும் நாம் எதிர்காலத்தில் கையிலெடுப்போம்” என்றார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கருத்து தெரிவிக்கையில்,
”கடந்த 2001ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா அம்மையார் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க முற்படும்போது அதனை அப்போது எதிர்கட்சியில் இருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்த்தார். ஆனால் தற்போதைய எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு ஆதரவு வழங்கும் என்றதை வரவேற்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் அவ்வப்போது தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க முற்படும் போது எதிர்கட்சி தலைவர்கள் எதிர்த்து தடையாக இருந்தனர். இருந்தபோதும் அண்மையில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உடன் இடம்பெற்ற கலந்துரையாடல் அவர் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு வழங்கவேண்டும் தீர்கப்பட வேண்டிய விடயம் அதற்கு அவரது கட்சி ஆதரவு வழங்கும் என்றார்.
நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை இந்த அரசாங்கத்தின் ஊடாக இந்த காலப்பகுதியிலே வருமா? இல்லையா? என்பது இரண்டாவது விடயம் ஆனால் அவ்வாறு வருவதற்கு சந்தர்பம் இருந்தால் எதிர்வரும் காலங்களில் பூரணமான ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மொனராகலை, பதுளை மாவட்டங்களில் இருதய சத்திர சிகிச்சைக்கு ஒரு இடமும் இல்லை அந்த மக்கள் யாழப்பாணம் சென்று சிகிச்சை பெறவேண்டியுள்ளது.
கிழக்கு மாகாண மக்கள் பதுளை மாவட்ட தமிழ் பேசும் மக்கள் இருதய நோயால் செத்தால் பறவாய் இல்லை நாங்கள் இனவாதிகள் என்று செயற்பட்ட இந்த மொட்டு அரசாங்கம் இனவாத அரசாங்கம் என்பதற்கு இதைவிட வேறு சாட்சியமில்லை. எனவே எதிர்வரும் காலத்தில் நாட்டின் தலைவராக வரப்போகும் எதிர்கட்சி தலைவரே முதலாவது வேலையாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இருதய சத்திரசிகிசை வழங்கவேண்டும்” என்றார்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
