கோட்டாபய போன்று விரைவில் ஓடுவார் ரணில்: எதிரணி ஆரூடம்
கோட்டாபய ராஜபக்சவைப் போன்று மிக மோசமான முறையில் ஆட்சியைக் கொண்டு செல்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எனவே, கோட்டாபயவை போன்று ரணிலும் விரைவில் பதவி துறந்து ஓடுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதேச சபை உறுப்பினராக ஆவதற்குக் கூட முடியாமல் இருந்தவர். நாட்டைச் சீரழித்தவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அப்படிப்பட்ட ரணிலை ஜனாதிபதியாக்கியுள்ளார்கள்.
பதவி துறந்து ஓடியவர்கள்
இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ரணிலைச் சிறைக்கு அனுப்பும் வரை நித்திரை கொள்ளமாட்டோம் என்று சொன்னவர்கள் இன்று ரணில்தான் சரியான தலைவர் என்கின்றார்கள், அவர்கள் தான் ரணிலை ஜனாதிபதியாக்கியுள்ளார்கள்.
மஹிந்த - கோட்டா ஆகியோர் பதவிகளைத் துறந்து ஓடி ஒழிந்துகொண்ட போது அவர்களுடன் சேர்ந்து ஒழிந்துகொண்ட 'மொட்டு'க் கட்சி எம்.பிக்கள் வீதிக்கு இறங்குவதற்கு வழியமைத்துக் கொடுத்தவர் இந்த ரணில், அதனால்தான் அவரைப் புகழ்ந்து பேசுகின்றார்கள்.
மக்கள் போராட்டங்கள்
அவர் மக்களின் போராட்டங்களை, பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவரது விருப்பத்தின்படி மிக மோசமான முறையில் ஆட்சியைக் கொண்டு செல்கின்றார்.
கோட்டாபய போன்று தான் ரணிலின் ஆட்சியும் இருக்கின்றது, எனவே கோட்டாவைப் போன்று ரணிலும் விரைவில் பதவி துறந்து ஓடுவார்.”என தெரிவித்துள்ளார்.





23 வயதில் ரூ. 250 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை!! யார் தெரியுமா? Cineulagam
