பருத்தித்துறை நகரசபை தவிசாளர் இருதயராசா பதவி விலகல்
இலங்கை தமிழரசு கட்சியின் யாழ் - பருத்தித்துறை நகரசபை தவிசாளராக இருந்த இருதயராசா இன்று (20.12.2022) பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 05.12.2022 கொண்டுவரப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பதவி விலகுமாறு கோரியதையடுத்து அவர் திடீரென பதவி விலகியுள்ளார்.

கடுமையான விமர்சனங்கள்
இந்நிலையில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, சபை உறுப்பினர்கள் இவரது செயலுக்குக் கடுமையான விமர்சனங்களை தெரிவித்தனர்.
இறுதி நேரத்தில் தனது பதவியை இராஜினாமா செய்தது பொறுப்பற்ற செயல் என பிரதி தவிசாளர் மதனி நெல்சன் கூறியதுடன், நகரசபை தவிசாளர் பதவியை இராஜினாமா செய்தது நகர மக்களுக்கு விடிவு என நகரசபை உறுப்பினர் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
புதிய தவிசாளர் தெரிவாகும் வரை சபை நடவடிக்கைகள் இடம்பெறாது என பருத்தித்துறை நகர சபை செயலாளர் அறிவித்துள்ளார்.
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri