இலங்கையில் வங்குரோத்து நிலைமையால் வறுமை அதிகரிப்பு: சஜித் பிரேமதாஸ (Photos)
நாட்டில் நிலவும் வங்குரோத்து நிலைமையால் வறுமை அதிகரித்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
''பிரபஞ்சம்'' வேலைத்திட்டத்தின் கீழ் 63 ஆவது கட்டமாக 50 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பஸ் ஒன்று கோட்டை ஆனந்த மகளிர் கல்லூரிக்கு சஜித் பிரேமதாஸவால் நேற்று (06.01.2023) அன்பளிப்புச் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது

நாளாந்த உணவுத் தேவை
பெற்றோர்களால் தமது பிள்ளைகளுக்குத் தேவையான புத்தகங்களைக் கூட வாங்கிக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்கள் தமது நாளாந்த உணவுத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மூன்றுவேளை சாப்பிட்டவர்கள் தற்போது இரு வேளையும், இரு வேளை சாப்பிட்டவர்கள் தற்போது ஒரு வேளையும் சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாக எம்மால் முன்னோக்கிச் செல்ல முடியாது.

கல்வித்துறையில் மறுசீரமைப்பு
நாட்டில் திருப்புமுனை ஒன்று தேவை. அது கல்வித்துறையில் ஏற்படும் மறுசீரமைப்பு சார்ந்த திருப்புமுனையாக இருக்க வேண்டும். தற்போது நடைமுறையிலுள்ள கல்விக்கொள்கையை மாற்றியமைக்க வேண்டும்.
இதனூடாக நாட்டை முதல் நிலைக்குக் கொண்டுவரும் வேலைத்திட்டம் உடனே ஆரம்பிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.



விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam