உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்
ஜனாதிபதி விக்ரமசிங்க உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஆதரவாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இது போன்ற ஒரு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முன்கூட்டிய உள்ளூராட்சி தேர்தல்கள் ஆளும் கட்சிக்குள் ஆழமான பிளவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று அஞ்சுவதாகவும் கூறப்படுகிறது.
பொருளாதார மீட்சி
சிறப்பான பொருளாதார மீட்சி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து அதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் மூலமான ஆணையைப் பெறுவதே ஜனாதிபதியின் விருப்பம் என்று சில சிரேஷ்ட அரசாங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்நடவடிக்கையானது சர்வதேச நாணய நிதியம் 48 மாத காலப்பகுதியில் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை வழங்குவதிலேயே தங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியம்
இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிதி டிசம்பரில் முடிவாகும் என்று எதிர்பார்த்த அரசாங்கம் இப்போது தங்கள் முடிவை அடுத்த ஆண்டு ஜனவரிக்கு வரை தள்ளி வைத்துள்ளது. அதன்பிறகும் தங்கள் யூக விளையாட்டைத் தொடருவார்கள்.
எவ்வாறாயினும் இந்த விவகாரம் அடுத்த ஆண்டு முதல் காலாண்டு வரை தாமதமாகலாம் என்பதே உண்மை என ஆங்கில செய்தித்தாள் கருத்துத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் உள்ளுராட்சி தேர்தலை நடத்த சட்டம் வலுவாக இருக்கின்ற போதும் சந்தேகமே நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
