ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி யாழில் தனித்துப் போட்டியிட தீர்மானம்
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் வாழைப்பழச் சீப்பு சின்னத்தில் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர், சட்டத்தரணி மைத்திரி குணரத்ன நேற்று சனிக்கிழமை (07.01.2023) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து கட்சி நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தார்.
இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
தனித்துப் போட்டி
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சிலரே யாழ்ப்பாணத்தில் இதுவரை காலமும் செயற்பட்டனர். மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்துள்ளனர்.
அந்த மாற்றத்தை வழங்குவதற்காக யாழ்ப்பாணம் உட்பட இலங்கை முழுவதும் தனித்துப் போட்டியிடவுள்ளோம்.
தேர்தல்களில் அடிப்படையான பிரதேச சபை
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாகாண சபை நாடாளுமன்றம் என நாம்
தேர்தலில் போட்டியிடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
