கிராஞ்சி கடலட்டை பண்ணைக்கு எதிரான போராட்டத்திற்கு யாழில் ஆதரவுப் பேரணி (photos)
கிளிநொச்சி - கிராஞ்சி பகுதி மக்களின் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை (16.12.202) ஆரம்பித்த போராட்டமானது வடமாகாண ஆளுநர் செயலகம் வரை சென்று நிறைவடைந்தது.

வடமாகாண ஆளுநரின் செயலாளரை சந்தித்த போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் தமது பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டினர். அச்சந்தர்ப்பத்தில் ஆளுநர் இல்லாத காரணத்தால் இரண்டு வாரங்களுக்குள் இதற்கான பதிலை பெற்றுத் தருவதாக ஆளுநரின் செயலர் வாக்குறுதியளித்ததாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
பெருமளவு பொலிஸார் குவிப்பு
போராட்டம் இடம்பெற்ற வேளை பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், ஆளுநர் செயலக நுழைவாயில் வழிமறிக்கபட்டு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற
உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருடன் கடற்றொழில் அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam