ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணிக்கு கிடைத்துள்ள இடம்
ஆண்கள் கிரிக்கெட் அணிக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (05)வெளியிட்டுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணி 4 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இலங்கை அணி
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் இலங்கை அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையிலே, இலங்கை அணி தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம் கிடைத்துள்ளது.
இந்த தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்திலும், நியூசிலாந்து அணி இரண்டாம் இடத்திலும், அவுஸ்திரேலிய அணி மூன்றாம் இடத்திலும் உள்ளன.
பாகிஸ்தான் அணி 5 ஆவது இடத்திலும், தென்னாப்பிரிக்க அணி 6ஆவது இடத்திலும் உள்ளதுடன், ஆப்கானிஸ்தான் அணி 7 ஆவது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து அணி ஆவது இடத்திலும், மேற்கிந்தியத் தீவுகள் அணி 9ஆவது இடத்திலும் மற்றும் பங்களாதேஷ் அணி 10 ஆவது இடங்களில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNELஇல் இணையுங்கள் JOIN NOW |
