கோவிட் நோயாளிகளை அனுமதிப்பதில் தாமதம் காட்டும் மருத்துவமனைகள்
கோவிட் நோயாளிகளின் அனுமதியை எந்தவொரு மருத்துவமனையின் நிர்வாகமும் நிராகரிக்க முடியாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலாநிதி அசேல குணவர்தன தெரிவித்தார்.
1990 நோயாளர் காவு வாகனங்களில் அழைத்து வரப்படும் நோயாளிகளை அனுமதிப்பதில் மருத்துவமனைகள் தாமதம் காட்டிய சம்பவங்கள் குறித்து தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சகம் சில நாட்களுக்கு முன்னர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில் நோயாளியை அனுமதித்த பின்னர் நோயாளியின் நிலைமைகளை கருத்தில் கொண்டு வேறு
மருத்துவமனை அல்லது இடைநிலை பராமரிப்பு மையத்திற்கு மாற்ற முடியும் என்ற
விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலாநிதி அசேல
குணவர்தன தெரிவித்தார்.