இலங்கையில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 761பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் புதுவருட கோவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2906ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 161,242 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,635 பேர் இன்று (22) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கோவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 126,995 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இவர்களில் 1,132 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.