இலங்கையில் ஏற்படவுள்ள மற்றுமொரு கோவிட் அலை! சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
இலங்கையில் மற்றுமொரு கோவிட் அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இலங்கையில் கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், சமீபத்திய மாறுபாடு காரணமாக தொற்றுநோய் மீண்டும் பரவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, சமீபத்திய மாறுபாட்டிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக, கோவிட்-19 தடுப்பூசியின் 4வது டோஸைப் பெறுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன பொதுமக்களிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
புதிய மாறுபாடு மிகவும் பரவக்கூடியது என்றும், 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோவிட்-19 தடுப்பூசியின் 4 வது டோஸைப் பெறுமாறும் குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
தடுப்பூசி செலுத்துவதன் மூலம் வைரஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு கடுமையான நோய்கள் மற்றும் இறப்புகளைத் தடுக்க முடியும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு செல்ல எதிர்பார்ப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், வெளிநாடு செல்ல எதிர்பார்ப்பவர்களும், 2வது பூஸ்டர் டோஸைப் பெறுவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், சுகாதாரத் துறை மருத்துவ அலுவலர் மற்றும் பிற ஒதுக்கப்பட்ட தடுப்பூசி மையங்களிலும் பெறலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக தடுப்பூசி மையங்களை அணுகி முன்பதிவு செய்யுமாறு பொதுமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

2,000 நாட்களாக தளராமல் தொடரும் தாய்மாரின் போராட்டம் 21 மணி நேரம் முன்

பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் 3 மகன்களையும் பார்த்திருக்கிறீர்களா?- அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் குழந்தை லட்சுமியின் வீட்டை பார்த்துள்ளீர்களா?- வீடியோவுடன் இதோ Cineulagam

பாவனிக்கு தாலி கட்டிய அமீர்! திருமணம் செய்து வைத்த விஜய் டீவி - பரபரப்பை ஏற்படுத்திய ப்ரோமோ Manithan

இலங்கைத் தமிழ் வம்சாவளியினரான மைத்ரேயி ராமகிருஷ்ணனைக் குறித்து மீண்டும் ஒரு புதிய தகவல் News Lankasri
