நாட்டில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
இலங்கையில் மேலும் இரண்டு பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து இலங்கைக்குள் கோவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 644 ஆக உயர்ந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி 79 வயதான களனியைச் சேர்ந்த பெண் ஒருவரும் ,73 வயதான பொலனறுவைச் சேர்ந்த ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,இலங்கையில் மேலும் 793 பேர் கோவிட் வைரஸ் தொற்றுடன் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஆயிரத்து 379 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, மேலும் 156 பேர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 311ஆகப் பதிவாகியுள்ளது.
6 ஆயிரத்து 424 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri