இலங்கையில் ஒரு லட்சத்தை கடந்தது கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை
இலங்கையில் கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சம் என்ற எண்ணிக்கையாக உயர்ந்துள்ளது.
இன்று மாலை வரையான காலப்பகுதி வரை இலங்கையில் கோவிட் தொற்றாளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 517ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே 2020ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் திகதியன்று முதல்முறையாக சீன பெண்மணி ஒருவர் கோவிட் தொற்றாளியாக இனங்காணப்பட்டார்.
இதனையடுத்து இலங்கையில் 2020 மார்ச் இரண்டாம் வாரத்தில் முதலாவது கோவிட் மரணம் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,கோவிட் பரவலில் கொழும்பு, கம்பஹா, குருணாகல் மாவட்டங்கள் மிகவும் ஆபத்தான மாவட்டங்களாக மாறியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் தினமும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாவட்டங்களை தவிர இலங்கையில் பல பிரதேசங்களில் கோவிட் கொத்தாணிகள் ஏற்பட்டுள்ளதுடன், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.