நாட்டில் மீண்டும் கோவிட் பரவல் தீவிரமடையும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் தற்போதைய கோவிட் நிலைமை புறக்கணிக்கப்பட்டு வருவதால் மற்றுமொரு கோவிட் அலை வேகமாக பரவி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
பொதுசுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கோவிட் பரவல் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மற்றும் சமூக மட்டத்திலிருந்து அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் கண்டறியப்பட்ட காய்ச்சல், பெரும்பாலும் கோவிட் பாதிப்புக்களாகவே அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடும் சட்ட நடவடிக்கை
இந்த கோவிட் நிலைமை மற்றும் காய்ச்சல் பாதிப்புகளை சுகாதார அமைச்சகம் மற்றும் அரசாங்கம் கருத்திற்கொள்ளவில்லை.

இந்நிலையில் கோவிட் வைரஸ் மீண்டும் பரவினால், கட்டுப்பாடின்றி நிகழ்வுகளை ஏற்பாடு செய்த அமைப்பாளர்கள் மீது தமது தொழிற்சங்கத்தினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதால் பாடசாலைகளில் கோவிட் தொற்றால் பாதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்,பெற்றோர் இது குறித்து கவனம் செலுத்துமாறும் தெரிவித்துள்ளார்.
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
புதிய சீரியலில் ஒன்றாக நடிக்கப்போகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... யார் தெரியுமா? Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan