வவுனியாவில் அதிகரிக்கும் கோவிட் தொற்று: சுகாதார பிரிவினர் எச்சரிக்கை (VIDEO)
வவுனியாவில் கோவிட் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதனால் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசியினை பெற்று கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதோடு கோவிட் மரணங்களும் பதிவாகி வருகின்றது. தற்போது பலர் கோவிட் தொற்றுக்குள்ளாகியும் உள்ளனர்.
இதன் காரணமாக கோவிட் தொற்று தீவிர நிலையை அடையாது தடுக்கும் நடவடிக்கையாக பைசர் கோவிட் தடுப்பூசிகள் மீள நாடளாவிய ரீதியில் ஏற்றப்பட்டு வருகிறது.
கோவிட் தடுப்பூசி
அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் 3வது கோவிட் தடுப்பூசியினை 43 வீதமானவர்களும், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 35 வீதமானவர்களும், வவுனியா வடக்கில் 35 வீதமானவர்களுமே தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.
அத்தோடு 4 வது தடுப்பூசி(பைசர்) வெளிநாடு செல்பவர்கள் மாத்திரமே குறைந்தளவில் செலுத்தியுள்ளனர்.
எனவே இதுவரை தடுப்பூசிகளை முறையாக பெறாதவர்கள் கோவிட் தடுப்பூசிகளை பெற்று
கொள்வதோடு, சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றுமாறு சுகாதார பிரிவினர்
அறிவுறுத்தியுள்ளனர்.