இலங்கையில் கொரோனாவினால் உயரும் உயிரிழப்புக்கள்- பல்லாயிரம் பேர் சிகிச்சையில்!
கொரோனா தொற்றினால் கடந்த வாரத்தில் மாத்திரம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமையன்று ஒரே நாளில் 36 இறப்புக்கள் பதிவாகின.
இதன்படி, தவிர கடந்த வாரம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 30 இறப்புகள் பதிவாகின.
இதனையடுத்து இதுவரை காலத்தில் இலங்கையில் கொரோனா தொற்றுக்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆயிரத்து 754 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை கடந்த வாரத்தில் மாத்திரம் 7701 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டனர்.
இதன்படி நாள் ஒன்றுக்கு 1200 முதல் 1300 பேர் வரை தொற்றுக்கு உள்ளாகினர்.
இதற்கிடையில் நாடளாவிய ரீதியில் 13ஆயிரத்து 581 பேர் மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் பராமரிப்புக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க இலங்கையில் இதுவரை காலத்தில் 625ஆயிரத்து 804 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், கொரோனாவை தடுக்க சுகாதார வழிமுறைகளே சிறந்தவை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.



