இலங்கையை அண்மித்து உருவாகவுள்ள வளிமண்டல குழப்பநிலை - அடுத்த 36 மணிநேர வானிலை தொடர்பில் எச்சரிக்கை
இலங்கைக்கு அண்மித்த பகுதியில், வெப்பமண்டலங்களுக்கிடையிலான ஒருங்கமைவு வலயம் (ITCZ) மற்றும் அதனுடன் தொடர்புடைய கீழ் வளிமண்டலக்குழப்பநிலை உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் நாளை (06) முதல் அடுத்த சில நாட்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்று (05) வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
தமிழக அரசியல் களத்தில் பதிவான மற்றுமொரு மாற்றம் - அடுத்தடுத்து தவெக விஜய்க்கு காத்திருக்கும் சவால்கள்
வளிமண்டல அமைப்பின் நகர்வு
வளிமண்டல அமைப்பின் நகர்வுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இது தொடர்பாக வரும் எதிர்கால அறிவிப்புகளுக்குப் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் கூறியுள்ளது.

மேலும், அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ள வளிமண்டலவியல் திணைக்களம், நாளை பல மாவட்டங்களில் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
குறிப்பாக சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு, காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவ மாவட்டங்களிலும் 100 மி.மீ-க்கு மேல் மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
மழை பெய்ய வாய்ப்பு
மேற்கு, சபரகமுவ, தெற்கு, ஊவா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவ மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.
மேலும், மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதாகவும், காலையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
நடிகர் ஜீவாவின் தந்தை, தயாரிப்பாளர் RB சவுத்ரி விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் சினிமா துறை Cineulagam