சீனாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடன் பெறும் இலங்கை
சீனாவின் அபிவிருத்தி வங்கியுடன் இலங்கை 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த உடன்படிக்கையில் சீனாவுக்கான தூதுவர் பாலித கோஹன கைச்சாத்திட்டார்.
இந்த நிதி இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார மீட்சிக்கு பயன்படுத்தப்படவுள்ளது.
இலங்கைக்கு வெளிநாடுகளின் முதலீடுகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று பாலித கோஹன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கைக்கு மேலும் சீன சுற்றுலாப்பயணிகளை வரவழைக்கவும் பாலித கோஹன தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வழங்குவதாகச் சீனா ஏற்கனவே உறுதி அளித்திருந்த ஒரு பில்லியன் அமெரிக்க டொலரின் இரண்டாவது கட்டமாக இந்த 500 மில்லியன் டொலர் கடன் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் News Lankasri