உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக இதுவரை 702 சந்தேகநபர்கள் கைது - அஜித் ரோஹன
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக மொத்தம் 702 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அவர்களில் 202 பேர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்,மேலும் 83 பேரை குற்றவியல் புலனாய்வுத் துறை மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் ஆகியோர் விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் மனைவி ஹதியா மற்றும் முகமது இப்ராஹிம் ஆகியோர் அடங்குவதாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தீவிரவாத வகுப்புக்களில் கலந்து கொண்டதற்காக கிட்டத்தட்ட 80 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் தற்கொலை குண்டு வீச்சாளர்களுக்கு
உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும்
அவரது சகோதரர் ரியாஜ் பதியுடீன் ஆகியோரை இன்று குற்றப்புலனாய்வுத்துறையினர்
கைது செய்தமையும் குறிப்பிடத்தக்கது.