உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் - ஆகஸ்ட் தொடக்கம் விரிவான வழக்கு விசாரணை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் எதிர்வரும் ஆகஸ்ட் தொடக்கம் விரிவான வழக்கு விசாரணையை முன்னெடுக்க நிரந்தர தீர்ப்பாய உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு விசேட நிரந்தர தீர்ப்பாய நீதிமன்றத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிபதிகள் இதனை அறிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பான விபரங்களை அறிந்திருந்தும் அதனை தடுக்கத் தவறியமை உள்ளிட்ட 23, 270 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 25 சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
சஹ்ரான் ஹாசிமின் நெருங்கிய நண்பரிடம் விசாரணை
பல்வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக விசேட பாதுகாப்புடன் சிறைச்சாலை அதிகாரிகள் அழைத்து வந்திருந்தனர்.

அவர்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரியாக அடையாளப்படுத்தப்படும் சஹ்ரான் ஹாசிமின் நெருங்கிய நண்பரான நௌபர் மவுலவியும் உள்ளடங்கியிருந்தார்.

குறித்த வழக்கை விசாரித்த தமித் தொடவத்த, அமல் ரணராஜா, நவரத்ன மாரசிங்க உள்ளிட்ட நீதிபதிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் தொடக்கம் வழக்கின் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று அறிவித்ததுடன், அதுவரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan