இலங்கை கடற்பரப்பில் ஈரான் கப்பல் மீதான முன்கூட்டிய அமெரிக்க தாக்குதல்: அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கை கடற்பரப்பில் ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து இலங்கைக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
ஈரானின் திட்டமிட்ட வான்வழி தாக்குதல்களால் மீண்டும் பதற்றம்! நடுவானில் சுட்டு வீழ்த்தப்படும் ட்ரோன்கள்
மூன்றாம் நாட்டிற்கு அறிவிப்பு
தாக்குதல் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புப்பிரிவினர் இலங்கைக்கு எந்தவொரு அறிவிப்பையும் விடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இரண்டு நாடுகளுக்கு இடையே போர்ச்சூழல் நிலவும் போது, ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் அது குறித்து மூன்றாம் நாடு ஒன்றிற்கு அறிவிப்பதில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடற்படைக்கு எவ்வாறு குறிப்பிட்ட தகவல் கிடைத்தது என்று தெரியாது எனவும், ஆனால் அந்தப் பகுதியில் சடலங்கள் மற்றும் சில உயிர்காக்கும் அங்கிகள் மிதப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே கடல்சார் மையத்திற்கு செய்தி கிடைத்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.