நிரந்தர வைப்புத்தொகையின் வட்டி விகிதம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
நிரந்தர வைப்புத்தொகையின் முழு ஒப்பந்த காலத்துக்கும் உரிய வட்டியை செலுத்த வங்கிகள் உறுதிபூண்டுள்ளதாக இலங்கை வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், இலங்கை வங்கிகள் சங்கத்தின் உறுப்பினருமான ரசல் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் 101 கதை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரசல் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்நாட்டு கடன் மேம்படுத்தல்
இவை உள்நாட்டு கடன் மேம்படுத்தல் வைப்புதாரர்களுக்கு எந்த இழப்பையும் அல்லது பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் பாதிக்கப்படாது என்றும் கூறியுள்ளார்.
மேலும், ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு வங்கிச் சங்கமும், உள்ளுர் வங்கிச் சங்கமும் ஆதரவளிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கமைவாக வட்டி விகிதங்களைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வட்டி விகிதக் குறைப்பு மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த வட்டி விகிதத்தின் கீழ், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள், ஏற்றுமதி தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் பெரிய வர்த்தகர்கள் தங்கள் தொழில்களை அபிவிருத்தி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
