வெளிநாட்டு வங்கி அட்டையை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
ராஜகிரிய, பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் வெளிநாட்டு வங்கி அட்டையை பயன்படுத்தி மின்சார கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொள்வனவு செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, அத்துருகிரியவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வங்கிக் கணக்கில் உள்ள டெபிட் கார்டை யாரோ ஒருவர் பயன்படுத்துவதாக வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, மின்கட்டணம் செலுத்தப்பட்ட பல்பொருள் அங்காடியை சோதனையிட்ட பொலிஸார், மின்கட்டண கணக்கு இலக்கத்தின் முகவரியில் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில், அவர் வீடொன்றில் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்து வீடு திரும்பிய நிலையில் வங்கி அட்டையை பல நாட்களாக பல்பொருள் அங்காடிகளில் பல்வேறு பொருட்களை வாங்கி வந்தமையும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் முறைப்பாட்டாளரின் கணக்கில் உள்ள வங்கி அட்டையைப் பயன்படுத்தி சுமார் 4 லட்சம் ரூபாவை செலவிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.



