மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்குமாறு கோரிக்கை
மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்குமாறு மதுவரித் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கும் மதுவரித் திணைக்கள ஆணையாளர் ஜே.எம். குணசிறிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரி அதிகரிப்பு காரணமாக மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக மதுபான உற்பத்தி நிறுவன பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே வரியை குறைத்து நுகர்வோருக்கு நிவாரணங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தவறான வர்த்தமானி அறிவித்தல்
இந்த ஆண்டுக்கான மதுவரி வருமானமாக 232 பில்லியன் ரூபாவை ஈட்ட முடியும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
உரிய முறையில் வரியை செலுத்துமாறும், போலி மதுபான உற்பத்திகளை தடுக்க ஸ்டிர்கர்களை போத்தலில் ஒட்டுமாறும் ஆணையாளர் நாயகம் கோரியுள்ளார்.
மதுவரி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட அனுமதிப்பத்திரங்களின் கட்டண அதிகரிப்பு குறித்த வர்த்தமானி அறிவித்தல் தவறுதலாக வெளியிடப்பட்டுள்ளது எனவும், ஜனாதிபதி நாடு திரும்பியதும் இந்த வர்த்தமானி அறிவித்தல் மீள பெற்றுக்கொள்ளப்படும் எனவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
