ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையில் பயணிப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது சில விமானங்களுக்கு புதிய வயர்லெஸ் பொழுதுபோக்கு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பயணிகள் தங்கள் கைகளில் எடுத்துச் செல்லும் ஸ்மார்ட் கையடக்க தொலைப்பேசி, டெப் அல்லது மடிக்கணினிகள் போன்ற சாதனங்களில், விமான நிறுவனத்தின் Wi-Fi நெட்வொர்க்கான SkyPlus வழியாக, இருக்கை பின்புறத் திரைகள் இல்லாமல், விமானத்திற்குள் பொழுதுபோக்கு அமைப்பை அணுக முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக குறுகிய தூர விமானங்களில் பயணிப்பவர்கள் இப்போது அதிக அளவிலான தனிப்பயனாக்கம் மற்றும் வசதியை அனுபவிக்க முடியும்.
திரைப்படங்கள்
மேலும் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்கள், இசை மற்றும் பலவற்றை விமானத்தில் ரசிக்க முடியும்.
ங்கள் பயணிகளுக்கு எல்லா நேரங்களிலும் வசதியான விமான அனுபவத்தை வழங்குவதே எங்கள் நோக்கம். புதிய வயர்லெஸ் பொழுதுபோக்கு வசதியை அறிமுகப்படுத்துவது எங்கள் இலக்கை நோக்கி மற்றொரு படியாகும், என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தயாரிப்பு மேம்பாட்டு மேலாளர் மரியா சதாசிவம் தெரிவித்துள்ளார்.
எங்கள் விருது பெற்ற விமான பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் அணுகக்கூடியதாக மாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
பொழுதுபோக்கு
வயர்கள் அற்ற பொழுதுபோக்கு துறையில் ஒரு முக்கிய மாற்றமாக வளர்ந்து வருகிறது. இது வாடிக்கையாளர்களுக்கும் விமான நிறுவனங்களுக்கும் பல நன்மைகளை வழங்குகிறது.
துமைகளைத் தழுவி, பயணிகள் அனுபவத்தை மையமாகக் கொண்டு, வயர்கள் அற்ற விமான பொழுதுபோக்குகளை வழங்கும் உலகளாவிய சேவைகளின் வரிசையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இணைவது ஒரு முக்கிய படியாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.