இலங்கையில் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா...! வெளியான அறிவிப்பு
மின்சார உற்பத்திக்காக தேவையான எரிபொருள் கிடைக்கப்பெறுவதனால் இதுவரை மின்வெட்டு மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என தேசிய கட்டமைப்பு செயற்பாட்டு தனியார் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி பி.எல். பிரதீப் பியதர்ஷன பெரேரா தெரிவித்துள்ளார்.
எனினும், மின்சார தேவை அதிகரித்துள்ளதால் நுகர்வோர் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மின்சார தேவையின் அதிகரிப்பு
பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையில் மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது.

இலங்கையின் மின் கட்டமைப்பில் இதுவரை வழங்கப்பட்ட மின்சாரத் தேவையின் அதிகப்படியான 3,089 மெகாவாட் அளவு கடந்த வாரம் திங்கட்கிழமை பதிவாகியுள்ளது.அதேபோல் அன்றைய மின் நுகர்வு 60.56 கிகாவாட் மணித்தியாலங்களாக காணப்பட்டுள்ளது.
வறட்சியான காலநிலை மற்றும் எரிபொருள் நெருக்கடி நிலவும் சூழலிலும், பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எமது தேவைக்கேற்ப எரிபொருளை வழங்குகின்றது.
எனவே, நாட்டில் மின்வெட்டு இன்றி தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை நாம் வழங்கி வருகிறோம்.எனவே, மின்சாரத்தை முடிந்தவரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam