இலங்கை பாகிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடருக்கு நெருக்கடி
இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடரை நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் தற்பொழுது நிலவி வரும் அரசியல் பதற்ற நிலையினால் போட்டித் தொடரை நடத்துவதில் சிக்கல் உருவாகியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் இரண்டு 50 ஓவர் போட்டிகள் நடைபெறவுள்ளன.
புதிய திகதிகள்
எனினும், இந்தப் போட்டிகளை நடாத்துவது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

இந்த இரண்டு போட்டிகளும் நாளை மற்றும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
போட்டிகளை நடாத்துவது குறித்து பாகிஸ்தான் இலங்கை கிரிக்கெட் நிர்வாகங்கள் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கும் எனவும் போட்டிக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை ஏ அணிக்கு எதிரான நான்கு நாள் போட்டிகள் இரண்டையும், 50 ஓவர் போட்டி ஒன்றையும் பாகிஸ்தான் ஏ அணி வென்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri