போராட்டத்தை அடக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்: ஸ்ரீகாந்தா

Ranil Wickremesinghe Sri Lankan protests Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lanka Anti-Govt Protest
By Theepan Jul 22, 2022 04:10 PM GMT
Report

காலிமுகத்திடல் போராட்டத்தை அடக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் பல எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

போரட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் இன்று(22) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “காலிமுகத்திடல் போராட்டத்தை அடக்குவதற்கு எடுக்கப்பட்டிருக்கும் அவசரத்துடன் இணைந்த அதிரடி நடவடிக்கை முற்றிலும் ஜனநாயக விரோதமானது.

போராட்டத்தை அடக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்: ஸ்ரீகாந்தா | Srikanta Has Supported The Vacillation Protestors

எச்சரிக்கை 

அரசியல் களத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள இந்த மக்கள் போராட்டத்தை அரசியல் ரீதியாகவும் ஜனநாயக வழியிலும் அணுகுவதற்கு பதிலாக, அடக்கு முறையை பிரயோகித்து அதனை முடக்க முயற்சிப்பது எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தி, பிரச்சினை மேலும் உக்கிரம் அடைவதற்கே வழிவகுக்கும்.

புதிய ஜனாதிபதியும், அவரின் தலைமையில் அமைக்கப்படும் அரசாங்கமும் நிதானத்துடன் இந்த போராட்டத்தை அணுகி, ஆரோக்கியமான முறையில் அதற்கான தீர்வினை கொண்டுவருவதற்கான சந்தர்ப்பத்தை தவறவிட்டால், இலங்கையின் எதிர்காலம் நெருக்கடிக்குள் மூழ்கிவிடும்.

கோரிக்கை

இந்த போராட்டம் தொடர்பிலான தவறான அணுகு முறையை கைவிட வேண்டும், போராட்ட சக்திகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் அத்துடன்  கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும்.

போராட்டத்தை அடக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்: ஸ்ரீகாந்தா | Srikanta Has Supported The Vacillation Protestors

தொடரும் எதிர் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், தீர்வு காணும் நோக்குடன் கூடிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முன்வரவேண்டும் என ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் கோருகின்றோம்.

இலங்கை மீது சர்வதேச ரீதியாக எழுந்திருக்கும் அனுதாபமும் காட்டப்படும் ஆதரவும் இழக்கப்படுமானால், மீட்டெடுக்கப்பட முடியாத இழப்புக்களையும், சீர் செய்ய முடியாத பின்னடைவுகளையும் நாடு நிச்சயம் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதை சகல தரப்பினரும் மறந்துவிட கூடாது”என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டகாரர்களை அப்புறப்படுத்தியமை குறித்து விளக்கமளித்துள்ள பொலிஸ் ஊடகப்பிரிவு


மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US