'கோட்டா கோ கம' போராட்ட கிளைகளை அகற்றுமாறு பொலிஸார் அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 'கோட்டா கோ கம' போராட்ட கிளைகளை அகற்றுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கொழும்பு ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் அங்கிருந்து அகற்றியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலிமுகத்திடல் தாக்குதல்
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் இன்று தாக்குதலை மேற்கொண்டனர்.
இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கோட்டா கோ கம போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்களான உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், இரண்டு ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்ற இதேவேளை, குறித்த பகுதியில் இருந்த சில வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.