தமிழரசுக் கட்சிக்குள் இருப்பவர்கள் திருந்துங்கள்! சிறீதரன் எம்.பி. எச்சரிக்கை..
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் உள்வீட்டுப் பிரச்சினை மிகக் கேவலமாக உள்ளது. இனியும் திருந்தாவிட்டால் மக்கள் முன் செல்ல முடியாது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
“நாடாளுமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டதைக்கூட இனிப்பு வழங்கி, பெனர் கட்டி கொண்டாடுகின்றனர். எமது மண்ணில் இதற்கு முன்னர் இப்படி நடந்துள்ளதா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தமிழ் மக்கள்
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"எனக்கு எதிராக மிகப்பெரிய உளவியல் போர் தொடுக்கப்படுகின்றது. இந்த உளவியல் போரால்தான் கட்சியில் இருந்து பலர் வெளியேறினார்கள். என்.பி.பி. மீது தமிழ் மக்கள் காதல்கொண்டு வாக்களிக்கவில்லை.

எமது கட்சி மீது இருந்த கோபத்தின் வெளிப்படுதான் அது. இது தமிழ் மக்கள் எமக்கு வழங்கிய தண்டனையாகும். இனியும் திருந்தாவிட்டால் மக்கள் முன் செல்ல முடியாது. அதேவேளை, சிறீதரன் யாரென்பது தமிழ் மக்களுக்குதெரியும்.
நாட்டை விட்டு ஓடியவன் கிடையாது. பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் இங்குதான் உள்ளனர்.
எனக்குப் பதவி முக்கியம் அல்ல. நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவிக்காக நான் அடிபடப்போவதில்லை. ஜனநாயக முறையிலேயே பதவிக்கு வந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.