தையிட்டி உரிமை போராட்ட களத்தில் சிறீதரன் எம்.பி
தையிட்டி கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் ஆதரவு வழங்கியுள்ளார்.
யாழ். தையிட்டியில் தனியார் காணிகளுக்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக இன்றைய தினம் நேற்று மாலை போராட்டம் ஆரம்பமானது.
சிறீதரன் ஆதரவு
விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் தமது ஆதரவை வெளிப்படுத்தி இருக்கின்றன.
இந்நிலையில் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
மேலும், தையிட்டி காணி அளவீடு செய்யப்படும் நோக்கம் தொடர்பில் எம்மவர்கள் சிலரிடம் காணப்பட்ட புரிதலின்மையைால் தையிட்டி விகாரையை சூழவுள்ள தனியார் காணிகளை கடந்த அரசாங்க காலத்தில் விடுவிக்க முடியாமல் போய்விட்டதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் போராட்டங்களூக்கும் கட்சின் பூரண ஓத்துழைப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
