வடக்கு கிழக்கு என்பது தமிழர் தாயகம்: சிறீதரன்
வடக்கு, கிழக்கு என்பது தமிழர் தாயகம். சிங்கள மக்கள் வர முன்பு பஞ்ச ஈஸ்வரங்கள் வைத்து வழிபட்ட இனம் தமிழர் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கல்மடு கிராமத்தில் நேற்று (13) இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் அரசியல் உரிமையை சரியாக கொண்டு போக முடியாத விஜித ஹேரத் தான் கடைசியாக நடந்த ஜெனீவா கூட்டத்தொடரில் சென்று தமிழ் மக்கள் எமக்கு மூன்று ஆசனங்களை வழங்கியுள்ளனர்.
பட்டலந்த படுகொலை
இங்கு இனப்படுகொலை நடக்கவில்லை ஏன் சர்வதேச விசாரணைக்கு உடன் படவில்லை, பட்டலந்த படுகொலைக்கு நீதி வேண்டும்.
ரணில் விக்ரமசிங்க தான் மக்கள் விடுதலை முண்ணனியை படுகொலை செய்ததாக தெரிவித்து அறிக்கையை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
ஆனால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பண்டா செல்வா ஒப்பந்தம் தூக்கி எறிவார்கள் ,பிரபா ரணில் ஒப்பந்தத்தை நிராகரிப்பார்கள் ,இலங்கை இந்திய ஒப்பந்தம் இரண்டு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம் அதை ஒன்றும் செய்ய முடியாது என்று இந்தியாவுக்கு பயந்து பார்த்துக்கொண்டு இருப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam
