தலைமை போட்டிக்கு தயாராகும் சிறிதரன்: திருக்கோணமலை விஜயம் (Photos)
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கும், தமிழரசுக் கட்சியின் திருக்கோணமலை மாவட்டக் கிளை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தி்ப்பானது நேற்று (31.12.2023)தமிழரசுக் கட்சியின் திருக்கோணமலை மாவட்டப் பணிமனையில் நடைபெற்றது.
தமிழர் உரிமை
இதில் உரையாற்றிய சிறிதரன் தான் தலைவராகத் தெரிவு செய்யப்படுமிடத்து, தமிழ் மக்களிடையே கட்சியின் செல்வாக்கை வளர்க்கவும், தமிழர் உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழ் தேசியத்தை முன்னெடுத்துச் செல்லவும், கூட்டு செயற்பாட்டை மேம்படுத்தவும், புலம்பெயர் தமிழரோடு சிறந்த உறவைப் பேணவும் அயராது உழைப்பேன் என்று உறுதியளித்தார்.

மேலும், மாவட்டங்கள் சார்ந்த முடிவுகளை எடுக்கும் போது மாவட்டக் கிளைகளோடு கலந்தாலோசித்து முடிவெடுப்பேன் என்றும் கூறினார்.இறுதியில் உறுப்பினர்களது வினாக்களுக்கு அவர் பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் திருக்கோணமலை மாவட்டக் கிளையானது, தனது உறுப்பினர் தத்தம் மனசாட்சிப்படி தலைவர் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



