மறைந்த ஊடகவியலாளருக்கு சிறீதரன் எம்.பி அஞ்சலி
மறைந்த ஊடகவியலாளர் நடராசா கிருஷ்ணகுமாரின் புகழ் உடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கடந்த (3.7.2025) அன்று கிளிநொச்சி மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளராக கடமை ஆற்றி வந்த நடராசா கிருஷ்ணகுமார் உடல் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
போர்க்காலத்தில் ஒரு ஊடகவியலாளராக செயல்பட்டு சிறந்த செய்தி அறிக்கையிடல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த நிலையில் போருக்கு பின்னரும் வடமாகாணத்தின் பத்திரிகைத்துறை மற்றும் இலங்கையின் தேசிய பத்திரிகை நிறுவனங்களில் ஒரு பிராந்திய செய்தியாளராக பணியாற்றி செய்தி அறிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.
அஞ்சலி
2009 ஆண்டு போர் உச்சமடைந்து காணப்பட்ட நேரம் இனப்படுகொலையின் சாட்சிகளை சேகரித்து செய்தி அறிக்கையிடல் செய்த ஊடகவியலாளராகவும் விமான குண்டு வீச்சுகள் தாக்குதல்களை அறிக்கையிட்ட ஒரு ஊடகவியலாளராகவும் செயற்பட்டு வந்தார்.
இவரின் இறுதி நிகழ்வுகள் நாளை(6) அக்கராயன் பகுதியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற உள்ள நிலையில் அன்னாரின் உடலுக்கு சி.சிறீதரன், பிரதேச சபை தவிசாளர் வேளமாலிகிதன் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
