யுத்தத்தை நடத்த மகிந்தவுக்கு உதவியவர்களே ஜேவிபி..! மனோ கணேசன் பகிரங்கம்
யுத்தத்தை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்சவுக்கு உதவியவர்கள் ஜேவிபியினரே எனவும் யுத்தத்திற்காக இளைஞர்களை சிங்கள கிராமங்களாக சென்று சேர்த்துக்கொண்டதும் அவர்களே என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்திற்காக இளைஞர்களை
செம்மணி என்பது அவலக் குரலின் அடையாளம். அரச பயங்கரவாதத்தினாலேயே செம்மணி போன்ற ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முன்னதாக உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் அடிப்படை காரணமே அதிகாரப்பகிர்வு என குறிப்பிட்ட மனோ கணேசன், இந்த விடயத்தை அமைச்சர் சந்திரசேகர் ஜனாதிபதி அநுரவுக்கும், ரில்வின் சில்வாவுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
மேலும், யுத்தத்தை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்சவுக்கு உதவியவர்கள் மக்கள் விடுதலை முன்னணியினரே எனவும் சிங்கள கிராமங்கள் தோறும் சென்று யுத்தத்திற்காக இளைஞர்களை சேர்த்துக்கொண்டதும் அவர்களே எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.