காணாமல் போனவர்களில் சிலர் பிரித்தானியாவில்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!
காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்பட்ட நபரொருவர் பிரித்தானியாவில் இருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக காணாமல் போனார் அலுவலகத்தின் தலைவர் கூறியதாக மட்டக்களப்பிலிருக்ககூடிய சிவில் சமூக செயற்பாட்டாளர் ரஜனி ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“தற்போதுவரை காணாமல் போனோர் அலுவலகம் மூலமாக 21 பேரை கண்டுப்பிடித்துள்ளோம் தான் வரும் போதுதான் உறுதிப்படுத்திவிட்டு வந்தேன்.
தற்போது 21ஆவது நபராக கண்டுப்பிடிக்கப்பட்டவர் பிரித்தானியாவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்று காணாமல் போனார் அலுவலகத்தின் தலைவர் தனக்கு தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தற்போது பலவீனமடைந்துள்ளது.ஆளணி பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.
தற்போது நாங்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் போராடுவதா? ஆளணி பற்றாக்குறைக்காக போராடுவதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு....

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
