காணாமல் போன க்ளீன் ஸ்ரீலங்கா! பதவி விலகும் உறுப்பினர்கள்
அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்ட பின்னர் ஆரம்பித்த வேலைத்திட்டங்களில் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் பிரதானமானது.
அதற்காக பாரிய ஊடக மற்றும் பிரச்சார செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்
இலங்கையின் அரசியல் கலாச்சாரம் மற்றும் அனைத்து துறைகளிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் க்ளீன் ஸ்ரீலங்கா உருவாக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
ஆயினும் இதுவரை க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஊடாக எந்தவொரு குறிப்பிடத்தக்க செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவோ, மாற்றங்கள் ஏற்படுத்தப்படவோ இல்லை.
அதற்குப் பதிலாக க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தற்போது ஒவ்வொருவராக பதவி விலகிக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களின் பதவி விலகல் கடிதம் நேரடியாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் குறிப்பிடப்படும் விடயங்கள் குறித்து ஜனாதிபதி தரப்பில் இருந்து இதுவரை பதில் வழங்கப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
