தலவாக்கலை நகரில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்
அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளின் கீழ் தலவாக்கலை நகரம் முதல் தொடருந்து நிலையம், பேருந்து நிலையம், கோயில் சாலை மற்றும் நகர மையப் பகுதியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை இன்றைய தினம் (29.03.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பலரின் இணைவில் திட்டம் முன்னெடுப்பு
இந்த கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை கல்வி மற்றும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மதுர செனவிரத்ன மற்றும் தலவாக்கலை லிந்துல நகரசபையின் புதிய மேயர் லியனகே உபாலி, தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர், கவுன்சில் துணைத் தலைவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் ரோஷன் சேகர், தலவாக்கலை பொலிஸார், தலவாக்கலை சாரதி சங்கத்தினர்கள், வர்த்தகர்கள் பலர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது குப்பைகளை அகற்றுதல் மற்றும் மரம் நடும் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri