கௌதாரிமுனையை வரைப்படத்தில் இருந்து எடுக்க முயற்சி: தமிழ் எம்.பி குற்றச்சாட்டு
கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கௌதாரிமுனையில் பாரிய மணல் கொள்ளை தலைதூக்கியுள்ளதாக நீ்ண்டகாலமாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
முன்னதாக அப்பகுதி மக்கள் 6 வருடங்களுக்கு முன்னர் மண் மேடுகளை அள்ள வேண்டாம் என போராட்டமும் நடத்தியிருந்தனர்.
இருப்பினும், அரசாங்கம் எந்த தீர்வையும் பெற்றுத்தராத நிலையில், மீண்டும் மீண்டும் மண் அகழ்வுகள் பெருமளவில் இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன.
இந்நிலையில், அங்குள்ள இயற்கை வளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இங்கேயும் இந்தியாவில் போன்ற ஒரு வயநாடு உருவாகி விடக்கூடாது எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
இவற்றிற்கிடையில், கௌதாரிமுனை பிரதேசம் இலங்கை வரைபடத்தில் இருந்தே இல்லாமல் போகுமளவுக்கு நீதித்துறையே இவற்றிற்கு அனுமதி வழங்கியுள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது,
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |