ஈழத்தமிழர் நலனோம்புகைச் செயற்பாடு:தொல்.திருமாவளவனுடன் சிறீதரன் கலந்துரையாடல் (photos)
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்திய மக்களவை உறுப்பினராக இருந்துகொண்டு ஈழத்தமிழர் நலன்சார் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் தொல்.திருமாவளவனை அவரது சென்னை அலுவலகத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பு தொடர்பில் தெரிவித்ததாவது,
முக்கிய கலந்துரையாடல்

“ஈழத்தமிழர் நலனோம்புகைச் செயற்பாடுகள், தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் இந்திய மத்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு, அந்நிலைப்பாட்டை தமிழர்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வதற்கு நிலத்திலும், புலத்திலும் மேற்கொள்ள வேண்டிய எத்தனங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலத்தின் பின் நடைபெற்ற இந்தச் சிநேகபூர்வமான சந்திப்பு தன்னளவில் நிறைவானதாக அமைந்திருந்தது எனவும் சிறீதரன் மேலும் தெரிவித்துள்ளார்.
| ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் இராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்த சிறீதரன்! |


