ஒக்டோபர் 14 ஆம் திகதி புதிய ஜனாதிபதி நியமிக்கப்படுவார்: ஹரின் பெர்னாண்டோ தகவல்
ஒக்டோபர் 14 ஆம் திகதி இலங்கையின் புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார் என காணி மற்றும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் முதல் வாரம் எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மீண்டும் ஒரு முறையாவது ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்கும் பொறுப்பு நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு நேற்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் புதிய ஜனாதிபதி
ஒரு நாட்டை மிகக் குறுகிய காலத்தில் வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றிய உலகின் ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க நோய்வாய்ப்பட்டவர்களைக் குணப்படுத்தும் சிறந்த வைத்தியர் என்றும், அவர் தயக்கம் காட்டினாலும் மக்கள் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தை அவருக்கு வழங்கி நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் மூன்று விதமான தேர்தல்களில் வெற்றிபெற்ற குழுக்களில் 47 வீதமானவர்களைக் கண்டுபிடிப்பது கனவாகவே காணப்படுவதாகவும் அந்தக் கனவுகள் ஒருபோதும் நனவாகாது எனவும் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 13 மணி நேரம் முன்

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
