ஜனாதிபதி மாளிகைக்குள் மீட்கப்பட்ட இலட்சக்கணக்கான பணம்! உண்மையை ஒப்புக்கொண்ட கோட்டாபய
ஜனாதிபதி செயலகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 1 கோடியே 78 இலட்சம் ரூபாய் பணம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சொந்தமானது என அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த பணம் தமக்கு சொந்தமானது எனவும் பணத்தை தமக்கே திருப்பித்தருமாறு சட்டத்தரணிகள் ஊடாக கோரிக்கை விடுத்த போதும், கோட்டை நீதவான் திலின கமகே அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
இந்த பணம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் குறித்த பணத்துக்கு வேறு யாரும் உரிமை கோராவிட்டாலும் பணத்தை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று நீதவான் அறிவித்துள்ளார்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி இந்த பணத்தை எவ்வாறு பெற்றுக்கொண்டார் இலஞ்சம் அல்லது பணமோசடி சட்டத்தின் கீழ் குற்றம் செய்தாரா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணிகளிடம் நீதவான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த பணம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவின் பேரில் முன்னாள் ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்சவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சுமார் 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் மூன்றாம் திகதி மீண்டும் அழைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஜூலை 9ஆம் திகதி கொழும்பு ஜனாதிபதி மாளிகைக்குள் பொதுமக்கள் பிரவேசித்த போது முன்னாள் ஜனாதிபதியின் காரியாலயத்தில் காணப்பட்ட பணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெறுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே பொலிஸ் விசேட குற்றத்தடுப்புப் பிரிவிற்கு கடந்த 13ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 20 நிமிடங்கள் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
