உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி 2023 ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியிருந்தாலும், பல காரணங்களால் அறிவிப்பு சில நாட்கள் தாமதமானது என்று இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அறிவிப்பு வெளியான 14 நாட்களுக்குப் பிறகு வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஜனவரி 5ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் திகதி அறிவிக்கப்படாவிட்டால், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எதிராக நிர்வாக ரீதியில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி எச்சரித்துள்ளார்.
தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையகம் பிறப்பித்த உத்தரவு
இதேவேளை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான, தேவைகளை வகுக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேர்தல்களை நடத்துவதற்கான அதிகாரம் பெற்ற உயர் அமைப்பான, தேர்தல் ஆணைக்குழு, தேர்தல் நடத்துவதற்கான தேவைகளை மதிப்பிடுவதற்கும், வாகனங்கள் மற்றும் பொது ஊழியர்களைக் கணக்கிடுவதற்கும், மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள உதவி தேர்தல் ஆணையர்களுடன் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்தநிலையில் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. தேர்தலில், உள்ளாட்சி நிர்வாகத்தை மேற்கொள்ள 8000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இதேவேளை நேற்றைய கூட்டத்தின்போது, தபால் மூல வாக்களிப்பு மற்றும்
வேட்புமனுக்களை கையளிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை
வழங்கப்பட்டுள்ளது
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2018 பெப்ரவரியில் நடத்தப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 7 நிமிடங்கள் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
