எதிர்வரும் 20ஆம் திகதி வரை ஶ்ரீ ரங்காவுக்கு விளக்கமறியல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஶ்ரீரங்காவை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வவுனியா நீதிமன்றத்தின் பிடியாணையை அடுத்து, களுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீரங்கா நேற்று முன்தினம் (17.03.2023) கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பிய நிலையில், நேற்று (18.03.2023) கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வழக்கு விசாரணை
கார் விபத்தில் பொலிஸ் அதிகாரி மரணமடைந்தது தொடர்பான வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாமை மற்றும் வழக்கின் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவருக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீரங்கா வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam