தலைமறைவான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்: முன்வைத்துள்ள கோரிக்கை
மன்னார் நீதிமன்றத்தில் 2012ஆம் ஆண்டு நடந்த சம்பவம் குறித்த விசாரணைகளை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என சிரேஸ்ட ஊடகவியலாளரான ஜெ. ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வவுனியாவில் இன்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "நீதிபதி யூட்சன் நீதிபதியாக இருந்த போது அந்நீதிமன்றத்துக்கு கல் எறியப்பட்டது எனவும், ரிஷார்ட் பதியுதீனால் அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது என்றும் முறைப்பாடு செய்திருந்தார்.
இது தொடர்பில் உரிய முறையிலான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என கூறி பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கா நீதிமன்றத்தை மூடி உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் இணைந்து பகிஷ்கரிப்பினை மேற்கொண்டிருந்தனர்.
இதற்கு பிறகு, விசாரணைகள் நடாத்தப்பட்டதுடன் ரிஷார்ட் பதியுதீனுக்கு எதிரான வழக்கு அரசுக்கெதிரானது என தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்காவை வீட்டுக்கு அனுப்பினார்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
