மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் புதிய வண்ணக்கர் தெரிவு(Photo)
மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வண்ணக்கராக மீண்டும் விக்ரமன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வண்ணக்கரை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று(02) காலை இடம்பெற்றுள்ளது.
இந்த தேர்தலின் தெரிவத்தாட்சி அலுவலரும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளருமான வி.வாசுதேவன் முன்னிலையில் இந்த தேர்தல் ஆலயத்தில் நடைபெற்றுள்ளது.
தேர்தல்
இதன்போது மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வண்ணக்கரை தெரிவு செய்வதற்கான வாக்குகளை அளிப்பதற்காக 1258பேர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 661வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 22 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 639 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக இருந்துள்ளன.
இதனடிப்படையில் வண்ணக்கர் தேர்வுக்கான போட்டியில் நந்தி சின்னத்தில் போட்டியிட்ட தி.விக்ரமன் 551 வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்றதாக தேர்தலின் தெரிவத்தாட்சி அலுவலர் அறிவித்துள்ளார்.
அத்துடன் வண்ணக்கர் தேர்தலில் போட்டியிட்ட மற்றைய வேட்பாளர் 63 வாக்குகளைப்பெற்று இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டார்.
முடிவுகள்
உதவி வண்ணக்கர் தேர்தலில் மயில் சின்னத்தில் போட்டியிட்ட சுரேந்திரகுமார் 451 வாக்குகளை பெற்றதுடன் பிள்ளையார் சின்னத்தில் போட்டியிட்ட வெ.இளங்கோ 188 வாக்குகளை பெற்றுள்ளார்.
இந்த தேர்தலில் வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் மற்றும் உதவி வண்ணக்கராக உ.சுரேந்திரனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.