ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறவுள்ள பாரம்பரிய நிகழ்வு
பெரும்போக நெற்செய்கையில் பெறப்படும் பிரதான பகுதியை ஸ்ரீ மஹா போதிக்கு அர்ப்பணிக்கும் 57 ஆவது தேசிய புத்தரிசி திருவிழா(National Fresh Rice Festival) நடைபெறவுள்ளது.
இந்த விழா இன்று(06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தலைமையில் ஸ்ரீ மஹா போதிக்கு முன்பாக நடைபெறவுள்ளது.
புத்தரிசி திருவிழா
விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் 57 ஆவது தடவையாக நடாத்தப்படும் இந்த புத்தரிசி திருவிழாவில், இலங்கையில் உள்ள ஒவ்வொரு விவசாய சேவை நிலையங்களிலிருந்தும் சேகரிக்கப்படும் அரிசி ஸ்ரீ மஹா போதிக்கு வழங்கப்படவுள்ளது.
புத்தரிசி திருவிழாவில் பங்கேற்பதற்காக நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் அனுராதபுரத்திற்கு (Anuradhapura) வருகை தருவது வழக்கமான விடயமாகும்.
எதிர்வரும் ஆண்டு பருவத்தில் பயிர்கள் செழிக்க புத்தரின் ஆசியை பெறுவதே இந்த புத்தரிசி திருவிழாவின் நோக்கம் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |