இலங்கையில் கடுமையான மருந்து தட்டுப்பாட்டுடன் போராடும் வைத்தியசாலைகள்! வெளியான தகவல்
இலங்கையில் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் கடுமையான மருந்து தட்டுப்பாட்டுடன் போராடி வருகின்றன, இது கடந்த எட்டு மாதங்களில் மோசமடைந்துள்ளது என இலங்கையின் பிரதான மருத்துவர் சங்க பிரதிநிதி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
அனைத்து வைத்தியசாலைகளும் பற்றாக்குறைகளை எதிர்கொள்கின்றன.
வெளிநோயாளர் சேவைகளுக்கு அடிப்படையான பரசிட்டமோல், விட்டமின் சி மற்றும் சேலைன் போன்றவற்றை வழங்குவதில் கூட சிரமம் உள்ளது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வாசன் ரத்னசிங்கத்தை கோடிட்டு ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வைத்திசாலைகளின் நிலைமை
புற்றுநோய், கண் வைத்தியசாலைகள் போன்ற சிறப்பு வசதிகளை கொண்ட வைத்தியசாலைகள், நன்கொடையில் இயங்குகின்றன என்று ரத்னசிங்கம் குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பான விளக்கமளிப்புக்காக, தாம் இலங்கையின் சுகாதார அமைச்சு
மற்றும் மூத்த சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொண்ட போதும் பதில்
வழங்கப்படவில்லை என்று ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.





Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
